மாடித்தோட்டத்தில் தக்காளி செடிகளை வளர்க்கும் எளிய முறை.
தக்காளி செடியினத்தை சேர்ந்த தாவரமாகும். அமெரிக்க கண்டத்திலிருந்து பிற கண்டங்களுக்கு பரவியதாக ஆராச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இன்றளவும் தக்காளி உற்பத்தியில் அமெரிக்கா தான் முதலிடம் வகிக்கிறது. தென் இந்தியாவில் அதிக அளவு இன்றளவும் பயிரிடப்படுகிறது. தென் இந்தியர்களின் அன்றாட உணவு பொருட்களில் தக்காளியின் பங்கு அதிகம்.
ஜூன் – ஜூலை, நவம்பர் – டிசம்பர், பிப்ரவரி – மார்ச், மாதங்கள் தக்காளி சாகுபடிக்கு ஏற்ற பருவங்கள் ஆகும்.வண்டல் மண்ணில் நல்ல மகசூலை தரும். மண்ணின் கார அமில தன்மை 6 – 7 ஆக இருக்க வேண்டும்.ஒரு ஹெக்டரில் பயிரிட 400 கிராம் அளவுள்ள விதை போதுமானது.
நிலத்தை நன்கு உழுது பாத்திகளை உருவாக்க வேண்டும் அதில் தேவையான அளவு தொழுஉரம் இட்டு நிரவிக்கொள்ள வேண்டும். அதில் தக்காளி விதைகளை தூவி நீர் பாய்ச்ச வேண்டும். 30 நாட்களில் நாற்றுகள் வளர்ந்துவிடும்.
பின்பு 100 செ.மீ தொலைவுகளில் பாத்திகள் அமைத்து நீர் பாய்த்து அதில் 1 அடி இடைவெளியில் நாற்றுகளை நட வேண்டும்.
நாற்று நட்ட இரண்டாம் நாள் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின்பு மண்ணின் ஈரத்தன்மையை பார்த்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
மண்புழுஉரம் அல்லதுதொழுஉரம் செடிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்கப் பயன்படுத்தலாம்.
வேப்பெண்ணைக் கரைசல் (30-40 மி.லி / 10 லிட்டர் நீர்) தெளித்து பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கை உரம் மற்றும் முறையான நீர் மேலாண்மை மூலமாகச் செடிகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்கலாம்.
நாற்று நட்ட ஒரு மாதத்திற்கு பின்பு அதில் வளர்ந்துள்ள தேவையற்ற களைகளை நீக்கி வேர்களுக்கு தொழு உரம் வைத்தால் நல்ல மகசூல் பெறலாம்.
அறுவடைக்கு தயாரான காய்களை மட்டும் பறிக்க வேண்டும், காய்கள் கரும்பச்சை நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும்பொழுது அதனை அறுவடை செய்ய வேண்டும்.
135 நாட்களில் ஒரு ஏக்கருக்கு35 டன் பழங்கள் அறுவடை செய்யலாம். வரப்பு பயிராக ஆமணக்கு அல்லது மக்காசோளம் அல்லது மிளகாய் பயிரிடலாம்.நாற்று நட்ட 30 ஆம் நாள் ஒரு கைக்களை எடுக்கவேண்டும். அதன்பிறகு களை எடுக்கவேண்டியது இல்லை
பயிர் நடவு செய்த25 நாட்களுக்கு மேல் செடி ஆங்காங்கே வாடி காய்ந்து விடும். இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நடவு செய்த ஒரு வாரத்திற்கு பிறகு 50 கிலோ மக்கிய தொழு எரு தூவி விட வேண்டும்.
0
Leave a Reply