துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 2 வெள்ளி, ஒரு வெண்கலம்.
ஜப்பானின் அய்ச்சி–நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ருத்ரான்க்ஸ் 631.8 புள்ளிகளுடனும், ஹிமான்சு தில்லான் 630.0 புள்ளிகளுடனும் முறையே 3வது மற்றும் 7வது இடங்களைப் பிடித்து தனிநபர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
மற்றொரு இந்திய வீரரான பார்த்த் ராகேஷ் 628.3 புள்ளிகளுடன் 11வது இடத்தைப் பிடித்து இறுதிச்சுற்று வாய்ப்பை இழந்தார்.
தகுதிச்சுற்றில் வீரர்கள் பெற்ற மொத்த புள்ளிகளின் அடிப்படையில் அணிகளுக்கான பதக்கம் தீர்மானிக்கப்பட்டது. ருத்ரான்க்ஸ், ஹிமான்சு மற்றும் பார்த்த் ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி 1,890.1 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றது.
சீனா 1,899.0 புள்ளிகளுடன் தங்கத்தையும், தென் கொரியா 1,884.2 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் கைப்பற்றின.
0
Leave a Reply