25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக சமூக விழிப்புணர்வு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் தேசிய பேரிடர் மீட்புப் படை சார்பாக சமூக விழிப்புணர்வு "Familiarization And Mock Exercise scheme" ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் (07.01.2025) அன்று தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) சார்பாக பழக்கப்படுத்தல் மற்றும் மாதிரிப் பயிற்சித் திட்டம்(Familiarization And Mock Exercise scheme) மூலம்  சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி  நடைபெற்றது.தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) 4-வது படையணியிலிருந்து (அரக்கோணம்) ஒரு குழு, விருதுநகர் மாவட்டத்தில் பழக்கப்படுத்தல் மற்றும் மாதிரிப் பயிற்சித் திட்டம்(Familiarization And Mock Exercise scheme) மூலம்  பேரிடர் முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வருகை தந்துள்ளது.இதன் ஒரு பகுதியாக பள்ளிகள், கல்லூரிகள், பாதிப்புக்குள்ளாகும் இடங்கள், அபாயகரமான இரசாயன விழிப்புணர்வு நிகழ்ச்சி (Community Awareness Programme – CAP)  உள்ளிட்ட பல்வேறு பேரிடர் சார்ந்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 07.01.2026 அன்று சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் அணித் தலைவர் SI/Exe திரு.எஸ்.ரத்னகுமார் அவர்கள் தலைமையில் 4 பேர் கொண்ட குழுவின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (Community Awareness Programme – CAP) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பேரிடரின் அறிமுகம், வகைகள் மற்றும் விளைவுகள், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (National Disaster Response Force) பங்கு மற்றும் பொறுப்புகள், முதலுதவி பயிற்சி, தூக்கி எடுத்துச் செல்லும் முறைகள், இரத்தப்போக்கு கட்டுப்பாடு, கார்டியோபுல்மோனரி ரெசசிட்டேஷன் (Cardiopulmonary Resuscitation), "Foreign Body Airway Obstruction" "அந்நியப் பொருள் சுவாசக் குழாய் அடைப்பு" FBAO, ஸ்பிளிண்டிங், டிரையாஜ், தற்காலிக ஸ்ட்ரெச்சர்கள் மற்றும் மிதக்கும் சாதனங்கள் (லைப் ஜாக்கெட், லைப் புய்) நிலநடுக்கம் - முன்/நேரம்/பின் செய்ய வேண்டியவை மற்றும் தேடல் முறைகள், மௌசம் சாசெட், தாமினி, பூகம்ப செயலிகள் தீ பாதுகாப்பு, வெள்ள மீட்பு, வெப்ப அலை, விஷமயக்கம் மற்றும் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி பாதுகாப்பு (CBRN)  அவசர நிலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.இந்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மொத்தம் 350 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News