பால், சர்க்கரை, கொக்கோ வெண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும் வெள்ளைச் சாக்லெட்டுகள் .
வெள்ளைச் சாக்லெட்டுகளில், சாக்லெட்டின் மூலப்பொருளான கொக்கோ விதைகளில் இருந்துசெய்யப்படும் நொதித்தல் முறையை நீக்கி விடுகிறார்கள். எனவே இது சாக்லெட்டின் உண்மையான சுவையை பெறுவதில்லை.வெள்ளை சாக்லெட்டுகளில் பால், சர்க்கரை, கொக்கோ வெண்ணெய் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். கொக்கோ விதைகளில் இருந்துஎடுக்கப்படும் ஒரு வித கொழுப்புப் பொருளே கொக்கோ வெண்ணெய் எனப்படுகிறது. சில நேரங்களில் கொக்கோ வெண்ணெய்க்கு பதிலாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட காய்கறி எண்ணெய் சேர்க்கப்படுவதும் உண்டு. 20 சதவீத அளவில் கொக்கோ வெண்ணெய் சேர்க்கப்பட்டு, வெள்ளை சாக்லெட் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விதி அமெரிக்காவில் உள்ளது.
0
Leave a Reply