25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் (26.08.2025) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதலமைச்சர் கோப்பை 2025-க்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.தெ.கண்ணன்,த.க.ப., அவர்கள்,  சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்  முன்னிலையில்,  வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் - 2025(Chief Minister’s Trophy Games - 2025) அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் 26.8.2025 அன்று  முதல் 10.9.2025 வரை நடைபெறவுள்ளது.இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில், மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும்  நடத்தப்படவுள்ளன.  

தனி நபர் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 இலட்சம், இரண்டாம் பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். குழு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.75 ஆயிரம், இரண்டாம் பரிசாக தலா ரூ.50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா ரூ.25 ஆயிரம்  வழங்கப்படவுள்ளது.அதன்படி, முதல் நாளான இன்று விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில், நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை  அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

அதன்படி, (26.08.2025) மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில்,  பள்ளி மாணவிகளுக்கான கைபந்து, கபடி, சிலம்பம் போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் மற்றும் சதுரங்கம் போட்டிகளும், சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கையுந்து பந்து போட்டிகளும், விருதுநகர் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவியர்களுக்கான ஹாக்கி போட்டிகளும், செந்திகுமார நாடார் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கிரிகெட் போட்டிகளும், விருதுநகர் ஆரள் விளையாட்டு அகாடமியில்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டிகளும், சாத்தூர் சன்இந்தியா பள்ளியில் பள்ளி மாணவிகளுக்கான கால்பந்து போட்டிகளும், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில்  பள்ளி மாணவர்களுக்கான  போட்டிகளும், சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான கேரம் போட்டிகளும் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இளைஞர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு எப்படி கல்வி முக்கியமோ அது போல உடல் வலிமை மிக முக்கியம். இளைஞர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும் போது, வேறு தவறான பழக்க வழக்கங்களுக்கு கவனங்கள் போகாது. எனவே, இளைஞர்கள் எதிர்கால சவால்களை சந்திப்பதற்கு உங்களது அறிவையும், உடலையும் தயார்செய்து கொள்ள வேண்டும். இந்த விளையாட்டில் நல்ல முறையில் பங்கேற்று மாநில அளவில் தேர்வாக வாழ்த்துக்களை தெரிவித்தார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News