ஒன்றிய அரசின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ,மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI- Top Class education in schools for OBC, EBC & DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, 2026-27 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ளது. (Top class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் – 12 வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் புதுப்பித்தல் மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarship.gov.in) விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.75,000/-, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 30% மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.
இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2025-26 கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Scholarship Portal - (https://scholarship.gov.in) கல்வி உதவித்தொகை படிவத்தை புதுப்பித்தல் (Renewal) செய்து இணைப்பில் பூர்த்தி செய்து 31.08.2026க்குள் விண்ணப்பித்திட வேண்டும். இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மாணவ/மாணவிகளின் விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள்: 15.09.2026.
மேலும், இத்திட்டத்திற்கு 2026-27-ஆம் ஆண்டிற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship portal (https://scholarship.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைதளத்தில் (https://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply