ஆசிய கோப்பை: வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி!
துபாயில் நடைபெற்று வரும் மகளிருக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், ஐசிசி தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 12-வது இடத்தில் இருக்கும் தாய்லாந்தை எதிர்கொண்டது.
‘டாஸ்’ வென்ற தாய்லாந்து அணியின் கேப்டன் திப்பச்சா புத்தவாங் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் என்ற சவாலான இலக்கை துரத்திய தாய்லாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 16.1 ஓவர்களில் 65 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இந்திய மகளிர் அணி அபார வெற்றியுடன் ஆசிய கோப்பை தொடரை தொடங்கியுள்ளது.
0
Leave a Reply