சிவகாசி மாநகராட்சி அறிவுசார் மையத்தில் ரூ.6 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகத்தினை அமைச்சர் அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அறிவுசார் மையத்தில்(06.06.2025) மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிவகாசி மாநகராட்சி சார்பில் ரூ.6 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ப்ரியா ரவிச்சந்திரன்,I A Sஅவர்கள் ஆகியோர் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பார்வையிட்டார்.
சித்திரக்கதைகள் நூலகம் என்பது குறுகிய வாசகர்களை கொண்டதாகவே இருக்கிறது. உலக அளவில் இது புகழ்மிக்க ஒரு துறை. உலக அளவில் குழந்தைகள் உடைய வாசிப்பை, உலகை திறந்து விடுவதற்கு காமிக்ஸ் தான் மிக சரியான வழி.
இன்று பெற்றோர்களுக்கான மிகப்பெரிய கடினம் குழந்தைகளிடமிருந்து செல்போனை வாங்குவது, ஒளிரும் திரைகளிலிருந்து அவர்களுடைய கண்களை விளக்குவது என்பது பெற்றோர்களுக்கு மிகப்பெரிய சவால். அந்த சவாலுக்கு நிச்சயமாக காமிக்ஸ் உதவும்.இது போன்ற புத்தகங்கள், இது போன்ற வாசிப்பு அனுபவங்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த காமிக்ஸ் உலகம் தொடங்கப்பட்டிருக்கிறது.
நிறைய பொழுதுபோக்கு அம்சங்கள் நமக்கு வந்துவிட்டன. உள்ளங்கையில் இருக்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் தரக்கூடிய வாய்ப்புகளையே நாம் முழுமையாக நிறைவு செய்து விடவில்லை. கைபேசியில் வரும் அனைத்து தகவலும் தகவல்களையும் பார்ப்பதற்கு நமக்கு நேரம் போதவில்லை. அதனை தேர்ந்தெடுத்து பார்ப்பதற்கான உலகத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக இது போன்று வாசிப்பு அனுபவங்கள் என்பது பல்வேறு சூழ்நிலைகளில் அவர்களை நிறுத்தி யோசிக்க வைப்பது.
ஒரு கதை படிக்கும் போது வாழ்வில் நிறைய திருப்பங்கள் வரும். ஒரு திருப்பத்தை எதிர்கொள்வதற்கு மனதளவிலும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
அந்த வாசிப்பு உலகத்திற்கு நேரடியாக ஒரு புத்தகத்தை எடுத்து தருவதோ, அவர்கள் படிக்கக்கூடிய பாட புத்தகங்களை தாண்டி, அதை புத்தகங்களுக்கு உடனடியாக அறிமுகம் செய்வதோ நிச்சயமாக உடனடியாக நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது. அந்த உலகத்திற்கு குழந்தைகளை அழைத்துச் செல்வது என்பது, எப்படி ஒரு குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றால், முதலில் பாதுகாப்பு உபகரணங்களோடு அவர்கள் நம்பிக்கையோடு அந்த தண்ணீரில் இறங்குவதற்கு நிறைய ஏற்பாடுகளை செய்கின்றோமோ அதே போன்று வாசிப்பு எனும் கடலில் அவர்களை இறக்குவதற்கு பாதுகாப்பான ஒரு வழிமுறைதான் காமிக்ஸ் என்ற உலகம். அந்த உலகத்திற்கு நாம் குழந்தைகளை கொண்டு செல்வதற்கு இந்த நூலகம் முக்கியமானதாக அமையும்.
அந்த வகையில் மாவட்டத்தில் முதல்முறையாக இராஜபாளையத்தில் குழந்தைகளுக்கான காமிக்ஸ் நூலகம் திறந்து வைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து சிவகாசியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
0
Leave a Reply