25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் .

விருதுநகர்  மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  (17.07.2026) ”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது.  இதில் முதல் கட்டமானது 17.07.2026 முதல் 31.07.2026 வரை சுயகணக்கெடுப்பு முறையிலும், இரண்டாம் கட்டமானது 01.08.2026 முதல் 31.08.2026 வரை கள கணக்கெடுப்பாளர்கள் மூலமும் நடைபெறும். மேலும் இப்பணிக்காக 3000 கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த சுய கணக்கெடுப்பின் (Self Enumeration)  மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான  கல்வி, வீடு, சாலை மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த திட்டத்தையும் அதன்    தேவையினையும் அறிய இந்த சுய கணக்கெடுப்பு விவரங்கள் உதவுகின்றன.எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின்  சுய விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவுடன் 11 இலக்க கணக்கெடுப்பு குறிப்பு எண் (Self Enumeration Reference Number (SRN)   வழங்கப்படுகிறது.  இந்த SRN-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்னர்  கணக்கெடுப்பாளர் (Enumerator) உங்கள் இல்லத்திற்கு வரும்போது, அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, இந்த சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை கணக்கெடுப்பாளரிடம் வழங்குவதன் மூலம், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அவர் சரிபார்த்து உறுதி செய்வார் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News