25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆடசித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆடசித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் தமிழக அரசு உத்தரவுப்படி அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ள 41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அதன்படி, விருதுநகர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட சண்முக சுந்தரபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை, வாழ வந்தாள்புரம் முதல் கோட்டூர் வரை,  விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் முதல் ஒண்டிப்புலி நாயக்கனூர் வரை,  விருதுநகர் ஏ ஆர் கிரவுண்ட் முதல் மத்தியசேனை விலக்கு வரை, துலுக்கப்பட்டி ராம்கோ சிமெண்ட் பேக்டரி முதல் மேட்டமலை வரை,  ஸ்ரீராம்பூர் முதல் அழகாபுரி வரை,  விருதுநகர் சிட்கோ முதல் மெட்டுக்குண்டு காலனி வரை,  சண்முகசுந்தரபுரம் விலக்கு முதல் மலைப்பட்டி வரை,  ராமசாமிபுரம் விலக்கு முதல் கோட்டூர் வரை,  பாலவனத்தம் முதல் சென்னல்குடி வரை,  முக்குளம் முதல் கட்டன்குளம் விலக்கு வரை, மெட்டுக்குண்டு காலனி முதல் சண்முகசந்தரபுரம் விலக்கு வரை, துலுக்கப்பட்டி முதல் மேட்டமலை வரை, காரியாபட்டி பேருந்து நிலையம் முதல் நெடுங்குளம் வரை, காரியாபட்டி ஐயப்பன் கோவில் முதல் குறிஞ்சன்குளம் வரை, பகுதி அலுவலகம் அருப்புக்கோட்டை அலுவலக செம்பொன்நெருஞ்சி முதல் மினர்வா வரை, சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட வெற்றிலையூரணி  முதல் கூத்தனாட்சியாபுரம் வரை, வெற்றிலையூரணி முதல் சேதுராமலிங்கபுரம் வரை,

 திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட லட்சுமி நாராயண மஹால் முதல் பொட்டல்பட்டி வரை, மல்லி முதல் இனாம் கரிசல்குளம் வரை, ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் பி மீனாட்சிபுரம் வரை, மல்லி முதல் அன்னை சத்யா நகர் வரை,  ஸ்ரீவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையம் முதல் மல்லி வரை, அழகாபுரி முதல் சுந்தரபாண்டியம் வரை, ஷேசபுரம் முதல் கூமாப்பட்டி வரை, பட்டியகல் முதல் கீழக்கோட்டையூர் வரை, பட்டியக்கல் முதல் மகாராஜபுரம் வரை, முத்துவெங்கடராயபுரம் முதல் வங்கார்பட்டி வரை, சத்திரப்பட்டி முதல் கோபாலபுரம் வரை, சமுசிகாபுரம் முதல் தும்பக்குளம் வரை, இளந்திரைகொண்டான் முதல் சொக்கநாதன்புதூர்விலக்கு வரை, பகுதி அலுவலகம், ராஜபாளையம் அலுவலக எல்லைக்குட்பட்ட காட்டன் மார்க்கெட் முதல் நரிமேடு வரை, ஆர்டிஓ ஆபீஸ் முதல் தொட்டியபட்டி வரை, காந்தி சிலை முதல் அன்னத்தலை விநாயகர் கோவில் வரை, சாராபட்டி முதல் குறுக்கம்பட்டி வரை, தளவாய்புரம் பேருந்து நிலையம் முதல் முறம்பு வரை, ராஜபாளையம் ரயில்வே நிலையம் முதல் சமத்துவபுரம் வரை, ரெட்டியாபட்டி முதல் அப்பநாயக்கன்பட்டி வரை, சுந்தரராஜபுரம் முதல் பத்மா மருத்துவமனை வரை, ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முதல் ஹீத் டிரஸ்ட் வரை,  MKS  பெட்ரோல் பல்க் முதல் அட்டைமில் முக்கு ரோடு வரை.

மேற்கண்ட 41 வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க உரிய அனுமதி பெற விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவத்தினை ஆன்லைன் மூலம் ரூ.1600- செலுத்தி பெற்று அதனை பூர்த்தி செய்து அதனை உரிய சான்று மற்றும் இணைப்புகளுடன்  20.03.2025-க்குள் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News