25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளைம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்கள் தொடர்புடைய பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (06.05.2025) நேரில் சென்று  பார்வையிட்டு, பயனடைந்து வரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தங்குளம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொருக்கம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.

தென்கரை ஊராட்சியில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் ரூ.16.75 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும்,பின்னர், இளந்திரை கொணடான் ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு உள்ள பணிகளையும்,மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சியில் கனிம வள நிதியின்  கீழ் ரூ.8.11 இலட்சம் மதிப்பில் மயான காத்திருப்புக்கூடம் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் பல்வேறு திட்டங்கள், பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News