பள்ளி /கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.
தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறும். பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 2024-25ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 21.01.2025 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 22.01.2025 அன்றும் விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற உள்ளன.பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் /அரசு உதவி பெறும்/ பதின்ம மேல்நிலைப் பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மட்டும் பங்கேற்கலாம்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் /அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/ பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு பள்ளி ஃ கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள் பங்கேற்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர் ஒப்பத்துடனும், கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும் கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் -(tamilvalar.vnr@tn.gov.in) முலமாகவோ 20.01.2025 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டிக்கான தலைப்புகள் முன்னதாக அறிவிக்கப்படமாட்டா. போட்டி தொடங்கப்படும் நேரத்திற்குச் சற்று முன்னர் தான் தலைப்பு தெரிவிக்கப்படும்.
போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கவுள்ளார். பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000-, இரண்டாம்பரிசு ரூ.7000- , மூன்றாம் பரிசு ரூ.5000- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.
மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு தொடர் வண்டிக் கட்டணம் பயணப்படியாக வழங்கப்பெறும். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.15,000- இரண்டாம் பரிசாகரூ.12,000- மூன்றாம் பரிசாக ரூ.10,000- வழங்கப்பெறும். மேற்காணும் போட்டிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply