25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில், மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரியில்  நடைபெற்ற 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (21.04.2025)  தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டத்தில், கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையிலும், அவர்களது தனித்திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு தலைப்புகளில் கோடைகால பயிற்சி முகாம்கள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது.அதன்படி, கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தில் 6 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடத்துடன் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனை விரிவுபடுத்தும் விதமாகவும், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாநில அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாம் 16.04.2025 முதல் 25.04.2025 வரை மதுரை தியாகராஜா பொறியியல் கல்லூரி மற்றும் சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரி ஆகிய இரண்டு இடங்களில் நடைபெறுகிறது.

இந்த சிறப்பு கோடைகால உண்டு உறைவிட தலைமைப் பண்பு பயிற்சி முகாமில் தலா 50 மாணவர்கள் வீதம் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த  மொத்தம் 100 மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News