25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில்  (08.03.2025) பெருந்தலைவர் காமராஜர் புதிய பேருந்து நிலையத்தின் 200-வது நாள் விழாவானது      மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டத்தின் நகரின் உடைய வடக்கு பகுதியில் இருக்கக்கூடியவர்கள் மிகவும் பாதிப்பு அடைவார்கள். அவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் இருக்காது. அதே நேரத்தில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய தெற்கு பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் வளர்ச்சி குறைவாக இருக்கிறது.எனவே, எந்த ஒரு வளர்ச்சியும் சமநிலையோடு, நீடித்த நிலையான அனைத்து தரப்பு வளர்ச்சியும் உள்ளடக்கிய ஒரு முயற்சியாக தான் இருக்கவேண்டும்.புதிய பேருந்து நிலையமானது அரசு அதிகாரத்தின் மூலமாக இயங்க வைக்கக்கூடாது. அது  பொதுமக்களின் ஆதரவோடு தான் வரவேண்டும்.

இந்த பேருந்து நிலையம் சரியாக செயல்பட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக 20 கூட்டங்கள் நடத்தப்பட்டு,அதற்கான சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வு என்ன என்பதை பற்றி பொதுமக்களே பேசி அதனை சரிசெய்தார்கள்.அமைச்சர் பெருமக்கள் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள்கள் உள்ளிட்டோர்களின் பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கைகள் எல்லாம் நிறைவேற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த பேருந்து நிலையம் 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட்டது.

அதற்கு பின்பும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அதனுடைய நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
எனவே, ஒவ்வொரு செயலும் பொதுமக்களுடன் இணைந்து மக்களுடைய கோரிக்கையின்  அடிப்படையில் அவர்களின் எந்த நலனையும் பாதிக்காத வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டு அனைவரும் இணைந்து மிகவும் சிறப்பாக 200 நாள் வந்திருக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தில் கடைகள் பொதுமக்களுக்கு தேவைப்படுவதால் அதிகமான கடைகள் கொண்டு வர வேண்டும். மேலும், பேருந்து நிலையம் ஆரம்பித்த பிறகு இந்த நகரின் உடைய தெற்கு பகுதி நிறைய வளர்ச்சியை பெற வேண்டும். விருதுநகர் மிகப்பெரிய வரலாற்று சிறப்புமிக்க நகராட்சியாக மாற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், விருதுநகர் நகர்மன்றத் தலைவர் திரு.மாதவன், போக்குவரத்து அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News