25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு சுவாமி,வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.

தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.தொடர்ந்து மூலவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற் றது. நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக் கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் உள்ள ராஜகணபதி பாலமுருகன் கோவில், மொட்டமலை பாலதண்டா யுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், விரு துநகர் அருகே எல்லிங்கநாயக்கன் பட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆமத்தூர் திருச்செந்திலாண்டவர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக - நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News