25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விளையாட்டு போட்டிகள்  29TH MARCH.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விளையாட்டு போட்டிகள் 29TH MARCH.

கூடைபந்து  

சிங்கப்பூரில், ஆசிய கோப்பை கூடைப்பந்து(3×3) தொடர், ஆண்களுக்கான 'பி' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. இந்திய அணி 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி,12 ஆண்டுகளுக்கு பின் காலிறுதிக்கு முன்னேறியது. 

டேபிள் டென்னிஸ் .

டேபிள் டென்னிஸ்சென்னையில், டபிள்யு. டி.டி.,'ஸ்டார் கன்டென்டர்' தொடர் ஆண்கள் ஒற்றையர் 2வது சுற்றில், இந்தியாவின் அஜந்தா சரத் கமல், ஆஸ்திரேலியாவின் நிக்கோலஸ் லம் மோதினர். சரத் கமல் 3-0 (11-8, 11-8, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்றார். 

ஸ்குவாஷ் 

சர்வதேச 'இந்தியன் ஓபன் ஸ்குவாஷ்' இந்தியாவில் ஏழு ஆண்டுக்குப் பின், மும்பையில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பைனலில் இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் 17 வயது சக வீராங்கனை அனாஹத் சிங், ஹாங்காங்கின் ஹெலன்

டங்கை சந்தித்தார். அனா ஹத், 3-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார். 

மல்யுத்தம்  

ஜோர்டானில்  ஆசிய 'சீனியர்' மல்யுத்த சாம்பியன்ஷிப்,. இந்தியா சார்பில் 30 பேர் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நேற்று நடந்தன.

62 கிலோ பிரிவு அரை யிறுதியில் இந்தியாவின் மணிஷா,5-1 என கிர்கிஸ்தானின் கல்மெராவை வீழ்த்தினார்.

அடுத்து நடந்த பைனலில் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற, வட கொரியாவின் முன் ஹியாங் யாங்கை எதிர் கொண்டார்.போட்டி முடிய ஒரு நிமிடம் இருந்த போது மணிஷா 2-7 என பின் தங்கி இருந்தார். பின் மீண்டு வந்த மணிஷா 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் பெற்றார். . 

தடகளம் 

 'இந்தியன் கிராண்ட்ப்ரி 1' தடகளம் இந்திய தடகள கூட்டமைப்பு சார்பில் பெங்களூருவில் ,பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் (பி) தமிழகத்தின் ஏஞ்சல் சில்வியா (11.67 வினாடி), ஸ்ரீவித்யா (12.00) தங்கம், வெள்ளி வென்றனர். 200 மீ., ஓட்டத்தில் ஜொலித்த ஏஞ்சல் சில்வியா (23.94 வினாடி) இரண்டாவது தங்கம் வென்றார்.

ஆண்களுக்கான போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின்ராஜா (5.00 மீ.,), கவுதம் (5.00), தங்கம், வெள்ளி  பெற்றார். . .

நீளம் தாண்டுதலில் தமிழக வீரர்கள் விஷ்ணு (7.73 மீ.,), சரண் (7.65), ஷ்ரோன் (7.64), முதல் மூன்று இடம் பிடித்தனர்.   

தமிழகத்தின் தமிழகத்தின் கோபிகா (உயரம் தாண்டுதல், 1.80 மீ.,), அபிநயா ஸ்ரீ (நீளம்தாண்டுதல்,6.13 மீ.,) ஹேமமாலினி (ஈட்டி எறி தல், 46.05 மீ.,) வெள்ளி வென்றனர். 

தமிழகம்  நட்சத்திரங்கள் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் கைப்பற்றினர். 

ஹாக்கி போட்டி 

 ஜூனியர் அணிகளுக்கான உலக கோப்பை,,சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் 14வது தொடர் சென்னை, மதுரையில் நடக்க உள்ளது. வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை நடக்கும் இத்தொடரில் முதன் முறையாக 24 அணிகள் பங்கேற்கின்றன.  

முதன் முறையாக புதிய நகரத்துக்கு போட்டியை கொண்டு செல்வது மகிழ்ச்சியாக உள்ளது," என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News