சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலில் செர்பியாவின் ஜோகோவிச் 3வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது.
ஆஸ்திரேலிய ஓபனில் முதன்முறையாக கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஒற்றையர் பிரிவில், முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். இத்தாலியின் ஜானிக் சின்னர் 2வது இடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலிய ஓபனல் பைனல் வரை சென்று 2வது இடம் பிடித்த செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4 வது இடத்தில் இருந்து 'நம்பர் -3' இடத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply