25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உப்பு லிங்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உப்பு லிங்கம்

காசிக்கு நிகராகத் திகழும் ராமேஸ்வரம் கோயிலில் சீதை உருவாக்கிய ராம லிங்கம், அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம், தவிர அபூர்வமான லிங்கம் ஒன்றுள்ளது. அதுதான் உப்பு லிங்கம்.

ஒருமுறை பாஸ்கர ராயர் என்னும் மகான் தரிசனத்திற்காக ராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது சிலர், "இந்தக் கோயிலில் மூலவராக உள்ள ராமலிங்கத்தை சீதாதேவி மணலில் உருவாக்கியதாகச் சொல்கிறார்கள். அப்படி இருந்தால் அபிஷேகத்தின் போது அந்த லிங்கம் கரைந்திருக்க வேண்டுமே" என வாதம் செய்தனர்.

அவர்களின் சந்தேகம் தீர்ப்பதற்காக உப்பு வாங்கி வரச் செய்தார் பாஸ்கரராயர். அதில் சிவலிங்கம் ஒன்றைச் செய்துபிரதிஷ்டை செய்தார். அதற்கு அபிஷேகம் செய்தும் காண்பித்தார். அந்த லிங்கம் கரையாமல் அப்படியே இருந்தது. சுவாமி சன்னதிக்குப் பின்புறம் இந்த லிங்கம் உள்ளது. இன்று வரை அபிஷேகம் நடந்தும் கரையவில்லை.

'அம்பிகையை வழிபடும் எளியவனான அடியேன் பிரதிஷ்டை செய்த சிவலிங்கமே கரையாத போது, கடவுளின் அவதாரமான ராமரின் மனைவி சீதை பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் அதிசயம் என்ன இருக்கிறது ?'எனக் கேட்டார். வலிமை மிக்க இதற்கு 'வஜ்ர லிங்கம்' என்றும் பெயருண்டு. இவரை தரிசித்தால் நோய் தீரும். மனம், உடல் பலம் பெறும்.

ராமேஸ்வரம் சென்றால் உப்பு லிங்கத்தை தரிசிக்க மறவாதீர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News