25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்.

ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் மலைகளுக்கு இடையில் உள்ளது புகழ் மிக்க ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில். இது பராசக்தியின் 51 சக்தி பீடங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள சரஸ்வதி, மகாலட்சுமியை தரிசித்தால் மாமியார், மருமகள் ஒற்றுமை பலப்படும்.

தட்சனின் மகளான தாட்சாயிணியை மணம் செய்தார் சிவபெருமான். ஆணவம் மிக்க தட்சன் ஒருமுறை சிவபெருமானை அழைக்காமல், தேவர்களை அழைத்து யாகம் ஒன்றை நடத்தினார். கோபம் கொண்ட தாட்சாயிணி நியாயம் கேட்க சென்றாள். ஆனால் மகள் என்றும் பார்க்காமல் தட்சன் அவமானப்படுத்தினான். இதனால் வருந்தியவள் யாக குண்டத்தில் விழுந்து உயிர் நீத்தாள். கோபம் கொண்ட சிவபெருமான் அந்த உடலை சுமந்தபடி நாடெங்கும் அலைந்தார். 

இதைதடுக்கதிருமால்தன்சக்கராயுதத்தை வீச, அவளின்உடல்பாகங்கள்பலஇடங்களில்சிதறின.அந்ததலங்களே 51 சக்தி பீடங்களாக உள்ளன. இதில் தாட்சாயிணியின் மணிக்கட்டு இங்கு விழுந்தது. இத்தலம் 27வது சக்தி பீடமாகஉள்ளது.கருவறையில் பார்வதியை அணைத்தபடி சிவபெருமான் இருக்கிறார். இவருக்கு இடப்புறம் காளியும், வலப்புறம் கவுரி விநாயகரும் உள்ளனர். இந்தச் சிலைகள் திரேதாயுகத்தைச் சேர்ந்தவை.

சிவனை சிந்தித்தபடி பார்வதி இங்கு இருப்பதால் இத்தலம் 'பிரிய பீடம்' எனப்படுகிறது. தம்பதியர் இங்கு வழிபட்டால் ஒற்றுமையாக வாழ்வர்.ஞானத்திற்கு அதிபதி சரஸ்வதி. செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி. இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி காளை வாகனத்தில் இங்குள்ளனர். காயத்ரி, மகாகாளியான சாமுண்டீஸ்வரியை வழிபட்டால் எதிரிபயம் விலகும். நந்தி பகவானே பைரவராக இங்குள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News