ராஜபாளையம் ரயில்வே சுரங்கப்பாதை பணி முடங்கியுள்ளது.
ராஜபாளையம் நடுவே செல்லும் ரயில்வே தண்ட வாளத்தை ஆம்புலன்ஸ் உள்ளிட்ட இலகு ரக. வாகனங்கள் நெரிசலில் மேம்பாலம் வழியே ஏறி செல்லாமல், சுரங்கப்பாதை மூலம் சுலபமாக கடக்க 800 மீ., நீளத்தில் ரூ.3 கோடி மதிப்பில் ரோடு டி.பி மில்ஸ் ரோடு, பி.எஸ்.கே ரோடு இணைக்க திட்ட அறிக்கைக்கு பொதுப் பணித்துறை, நகராட்சி சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ரயில்வே சார்பில் பணிகள் தொடங்கி கான்கிரீட் பிளாக்குகள் தண்ட வாளம் கீழ்ப்பகுதியில் புதைக்கப்பட்டு மின் வழித்தட கம்பிகள் மாற்றி பொருத்தியும், சுரங்கப் பாதைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டு ரயில்வே தரப்பில் பணிகள் முடிந்தது.
இணைப்புக்காக டி.பி மில்ஸ் ரோட்டில் 6 மீட்டர் நிலம் ஒதுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இப்பாதை திருமங்கலம், கொல்லம் தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றுப்பாதையாக உள்ளது. எனவே ரயில்வே துறை 4 மீட்டர் நிலம் வழங்க முன்வந்தால் நகராட்சி சார்பில் 2 மீட்டர்இடம்ஒதுக்கமுடியும்எனதெரிவிக்கப்பட்டது.
இணைப்பு ரோடு தாமதத்தால் சுரங்கப்பாதையை தற்காலிகமாக மண் போட்டு மூடி விட்டனர். செயல் பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறுவதாக தெரியவில்லை. போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம், ஆபத்தாக கடந்து செல்வதால் விபத்து அபாயம் போன்ற சிக்கல்களை தினமும் சந்தித்து வருகின்றனர். விபரீதம் ஏற்படுவதற்கு முன் சிக்கலுக்கு வழிகாண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
0
Leave a Reply