ராஜபாளையம் பயணிகள் முழு பயன்பாட்டிற்கு வராத பஸ் ஸ்டாண்ட்டினால் அவதி .
ராஜபாளையம் நகர் பகுதி நடுவே தேசிய நெடுஞ்சாலையில் பழைய பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்த நிலையில், கட்டடங்கள் பலமிழந்ததால்,ரூ.3கோடி 40லட்சம்செலவில்புதுப்பிக்கப்பட்டுகலைஞர்நகர்புறமேம்பாட்டுதிட்டத்தின்கீழ் ,மே 29 இல் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது.
தினமும் 300க்கும் அதிகமான பஸ்களும் ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் இதுவரை பயணிகளுக்கான சுத்திகரிக்கப்பட்ட இலவச குடிநீர், கழிப்பறைஉள்ளிட்ட அடிப்படை வசதிகள் ,கிராமங்களுக்கு செல்லும் நேர அட்டவணை வைக்காமல் , ஊர், பெயர் வழித்தடங்களும் எழுதப்படவில்லை . பணிக்கு செல்பவர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் நுழைவுப் பகுதி ஓரங்களிலும் உள் பகுதியிலும் டூவீலர்பார்க்கிங்காக மாற்றி ஆக்கிரமித்துள்ளனர்.
இரவில் பயணிகள் இயற்கை உபாதைக்கு வழியில்லாத வகையில் 8:00 மணிக்கு மேல் கட்டண கழிப்பறைகள் பூட்டப்படுகிறது. வளாகத்தில்கடைகள் ஏலம் விடப்படாததால் புதிய கடைகள் திறக்காமலும் உணவகங்கள் செயல்படாமலும் உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்ட்திறக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்தும், செயல்பாட்டிற்கு வந்தும் , பயணிகளுக்கு வசதிகள் இல்லை. இதை யார் சரிசெய்வார்கள் ? மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
0
Leave a Reply