25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

இந்தியாவின் 38வதுதேசியவிளையாட்டுஉத்தரகாண்ட்டில்நேற்றுதுவங்கியது.டேராடூன், ஹரித்வார், நைனிடால், ஹல்டுவானி, ருத்ரபூர், ஷிவ்பூரி, நியூ டெஹ்ரி உள்ளிட்ட 11 இடங்களில், 18 நாள் நடக்கும். 37 அணிகளில் இருந்து 10,000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.

நீச்சல், துப்பாக்கிசுடு தல், மல்யுத்தம், பாட் மின்டன், ஹாக்கி, குத்துச் சண்டை, பளுதுாக்குதல் கால்பந்து, டென்னிஸ், டேபிள் டென்னிஸ் உட்பட 32 விளையாட்டுகளில் போட்டிகள் நடக்கின்றன.

நேற்று இதற்கான துவக்கவிழா,அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் பிரதமர் மோடி மைதானத்தை வலம் வந்தார். மேடையில் இவருக்கு பாரம்பரிய தொப்பி, சால்வை உள்ளிட்ட நினைவு பொருள் வழங்கப்பட்டன. 

டேராடூனில் உள்ள ராஜிவ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் தேசிய விளையாட்டு துவக்கவிழா நடந்தது. குளிரையும் பொருட்படுத்தாமல், மொத் தம் 25,000 பேர் திரண்டு கண்டுகளித்தனர். 

தேசிய விளையாட்டினை ரூ. 350 கோடி செலவில் நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு புதிய கட்டுமான பணிகள் செய்யப்பட்டதால், ரூ.1000 கோடி வரை செலவாகியுள்ளது. உத்தரகாண்ட் தேசிய விளையாட்டில் மொத்தம் 450 தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளன. இதேபோல தலா 450 வெள்ளி, வெண்கலப் பதக்கமும் வழங்கப்படும். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News