25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பைரவர் தோன்றிய வரலாறு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பைரவர் தோன்றிய வரலாறு

பைரவர் தோன்றிய வரலாறு சிறப்பானதாகும். தொடக்க காலத்தில் பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் தோற்றுவிப்பவர் என்பதால், பிரம்மனுக்கு கர்வம் உண்டானது. அதோடு சிவனை விட நாம்தான் உயர்வானவர் என்று எண்ணினார். அனைவரும் தன்னை வணங்க வேண்டும். சிவனை விட தன்னை ஒரு படி மேலே நினைக்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதோடு மட்டுமல்லாமல் சிவன் செய்யும் ஒவ்வொரு நிகழ்விலும் தலையிட்டுக்கொண்டே வந்தார்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான், தனது நகத்தினைப் பெயர்த்து தரையில் போட்டார். அதில் இருந்து கால பைரவர் தோன்றினார். அவர் வேகமாகச் சென்று பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை கொய்தார். அதன் பிறகே பிரம்மன், நான்முகனாக மாறினார். தனது அகந்தை அழிந்து, சிவபெருமானின் பக்தரானார் என்று சிவ மகாபுராணம் சொல்கிறது. சக்தி பீடங்கள் தோறும் காலபைரவர் மிகச் சிறப்பாகப் போற்றப்படுகிறார். தகுராசூரன் என்பவன், பெண்களால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும்' என்ற வரத்தை பெற்றிருந்தான். அந்த ஆணவத்தால், மக்கள் அனைவரையும் துன்புறுத்தி வந்தான்.

இதையடுத்து பார்வதிதேவி, காளியாக வடிவம் எடுத்து அந்த தகுராசூரனை அழித்தாள். அதன் பிறகு அவளின் ஆக்ரோஷத்தில்தான் கால பைரவர் தோன்றினார் என்று சொல்பவர்களும் உண்டு. அன்னை அவருக்குப் பால் கொடுக்கும்போது, இருவரையும் சிவபெருமான் ஆட்கொண்டார். சிவபெருமானைப் போலவே, பைரவருக்கும் 64 வடிவங்கள் சிறப்பாக போற்றப்படுகின்றன. இவரை 'அஷ்ட பைரவர்' மற்றும் 'சட்டநாதர்' என சிறப்புப்படுத்தி அழைக்கிறார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News