தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் (தாட்கோ) சார்பில், பயனாளிக்கு மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்பத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் (10.12.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசானது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதோடு, ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை / சுய வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் மற்றும் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தாட்கோ நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு, நிலம் வாங்கும் திட்டம், சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் வங்கி கடனுதவிக்கான மானியங்களையும்,சுகாதாரப் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டு, இயற்கை மரணத்திற்கு உதவி, இறுதிச் சடங்குகளுக்கு உதவி, திருமணத்திற்கான உதவி, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்பத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் (10.12.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிமற்றும்மேம்பாட்டுக்கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பிலான மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், பயனாளிகளிடம் குடும்பத்தின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு, குழந்தை கல்வியின் முக்கியத்துவம், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.இத்திட்டத்தின் கீழ், பயனடைந்தவர்கள் எங்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடனுதவிகளை வழங்கியதோடு, அதற்கான மானியத்தையும் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில், தாட்கோ மாவட்ட மேலாளர்(பொ) திருமதி அ.மஞ்சுளா, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரா.பாண்டிச்செல்வன், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply