சிவகாசி அருகே நாரணாபுரம் கண்ணா நகரை சேர்ந்த பாண்டிமாதேவி சர்வதேச பளுதுாக்கும் போட்டியில் தங்கம் வென்றார்.
அச்சக தொழில் செய்து வரும் தவசிக் குமார் 56. இவரது மனைவி உணவியல்நிபுணராக பாண்டிமாதேவி 50. இந்தத் தம்பதியினரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி பேரன்கள் உள்ளனர். பாண்டிமாதேவி நவ 30ல் தாய்லாந்தில் நடந்த சர்வதேச அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்றார். 20 நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், இதில் இந்தியாவிலிருந்து 19 பேர் கலந்து கொண்டனர்.
வயது பிரிவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட போட்டியில் 40 முதல் 50 வயதுக்குட்பட்டோருக்கான தனிப்பிரிவில் 310 கிலோ எடையை துாக்கி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
கடந்த மூன்றுஆண்டாகஇப்போட்டிக்குதயாரானேன்.ஏற்கனவேமாநிலஅளவில் 5 போட்டிகளிலும், தேசியஅளவில் 3 போட்டிகளிலும் தங்கம் வென்று தாய்லாந்து போட்டிக்கு தேர்வானேன்.
பாண்டிமா தேவி கூறு கையில் "சாதனை படைப்பதற்கு வயது ஒரு தடையல்ல. 37 வயதிற்குப்பிறகு உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் தூண்டப்பட்ட எனக்கு 50 வயதில் சர்வதேச பளு துாக்குதலில் தங்கப்பதக்கம் வென்றதை நினைத்துபெண்ணினத்திற்கே பெருமை சேர்த்துள்ளதாக பெருமிதம் கொள்கிறேன்.பல்வேறு போட்டிகளில் சாதனை படைக்க ஆசைப்படுகிறேன்" என்றார்.
0
Leave a Reply