25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் நெடுஞ்சாலையை ஒட்டி வடமாநில வியாபாரிகள் கடைகள் தொடரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் நெடுஞ்சாலையை ஒட்டி வடமாநில வியாபாரிகள் கடைகள் தொடரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம்.

நகரங்களை அடுத்து உள்ள நெடுஞ்சாலைகள், கிராமச்சாலைகள் என மக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் வடமாநில வியாபாரிகள்,இவர்கள் சீசனுக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுத்த பொருட்களை மொத்தமாக கொண்டு வந்து சில்லறை வியாபாரிகளை அணுகி விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தற்காலிக கடை விரிப்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.

 இவற்றை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி பேரம் பேசுவதால் பின்னால் வரும் வாகனங்களுக்கு விபத்து அபாயம் ஏற்படுகிறது. சாலையோரம் விரிக்கும் கடைகளில் வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக ரோட்டின் வெள்ளை அபாய கோடு வரை கடை பரப்பி வைக்கின்றனர்.சாலைகளின் குறிப்பிட்ட தொடர்ச்சியாக கடை  இடைவெளிகளில் பரப்பி நிற்கும் இது போன் றவர்களை போக்குவரத்து போலீசார், நெடுஞ்சாலைத்துறையினர் கண்டு கொள்வதில்லை. 

இவர்களின் விதி மீறலால் ஏதும் அறியா வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவதை தடுக்க வேண்டும். ரோட்டில் இருந்து சற்று தொலைவில் கடைகள் அமைப்பது குறி த்து  விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் வலியுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *