25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜி.வி.பிரகாசுக்கு தேசிய விருது .

 'சூரரை போற்று' படத்துக்காக தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகா சுக்கு, மீண்டும் தேசிய விருது கிடைத்துள்ளது .71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் 'பார்க்கிங்' படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தது. 'வாத்தி’படத்தில் இசையமைத்த ஜி.வி.பிரகாசுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது அறிவிக்கப்பட்டது. அவர் கூறும்போது, "ஜி.வி.பிரகாசுக்கு 2-வது முறையாக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்திருப்பதால்  முன்னாள் மனைவி சைந்தவி  வாழ்த்தி பாராட்டி விருதுக்காக அவரை தேர்வு செய்த தேர்வுக்குழுவினர், வாத்தி படத்தில் அவரை இடம்பெற செய்த படக்குழுவினர், படத்தில் என்னையும் ஒரு பகுதியாக இணைத்திட்ட தனுசுக்கும் என் நன்றிகள்”, என்றார்.ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், இசை நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக பங்கேற்று வருகிறார்கள் .

இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிகராகவும் பயணிக்கிறார். இவர் நடித்துள்ள 'பிளாக்மெயில்' படம் ரிலீஸாவதாக இருந்தது. நிதி பிரச்னையால் கடைசிநேரத் தில் தள்ளி வைக்கப்பட்டது. இதேபோல்இவர் நடித்து நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த அடங்காதே படம் ஆக., 27ல் ரிலீஸ் என அறிவித்தனர். ஆனால் இப்பட தயா ரிப்பாளர் சரவணன் சிறையில் உள்ளதால் தள்ளிப் போகிறதாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News