காளான் வடை (Mushroom vadai).
தேவையான பொருட்கள் -
காளான் - 1 கப் (பொடியாக நறுக்கியது),
கடலைப்பருப்பு - 1 கப் (1-2 மணி நேரம் ஊறவைத்தது),
சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம்,- 1 (பொடியாக நறுக்கியது),
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது), இஞ்சி - பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
சோம்பு -1 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு,
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிட்டிகை, உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
செய்முறை -
ஊறவைத்த கடலைப்பருப்பை தண்ணீரை முற்றிலும் வடித்துவிட்டு, அதனுடன் சோம்பு, உப்புசேர்த்து கொரகொரப்பாக (அரைப்படன் இல்லாமல்) அரைத்து எடுக்கவும்.
பொடியாக நறுக்கிய காளானை நன்கு அலசி, அதில் உள்ள ஈரம் நீங்கிய பின் அரைத்த பருப்புடன் சேர்க்கவும்.
இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
கைகளில் சிறிது எண்ணெய் தடவிக்கொண்டு, கலவையைச் சிறிய உருண்டைகளாக எடுத்து வடைகளாகத் தட்டவும்.
கடாயில் எண்ணெய் சூடானதும், வடைகளைப் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக மற்றும் மொறுமொறுப்பாக பொரித்து எடுக்கவும். சுவையான காளான் வடை தயார்.
0
Leave a Reply