25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


மஷ்ரூம் வெங்காய பக்கோடா(mushroom onion pakoda).
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மஷ்ரூம் வெங்காய பக்கோடா(mushroom onion pakoda).

தேவையான பொருட்கள் -
2 நீளவாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம், 1 பாக்கெட் மஷ்ரூம்,
1டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1/2 டீஸ்பூன் கரம் மசாலா,
தேவையானஅளவு உப்பு,1 கப் கடலை மாவு,
4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு,சிறிதுபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை,
சிறிது பெருங்காயத்தூள், 2 டேபிள்ஸ்பூன் சூடான வனஸ்பதி, எண்ணெய் பொரிப்பதற்கு.


செய்முறை - 
ஒரு பாத்திரத்தில் வெங்காயம், மஷ்ரூம் மற்றும் மிளகாய் தூள்,உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு இதில் கடலை மாவு, அரிசி மாவு,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி,கறிவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும் .தண்ணீர் விட அவசியம் இல்லை.
வெங்காயம் மஷ்ரூமிலிருத்து வெளிவரும் தண்ணீர் போதுமானதாக இருக்கும். பிறகு இதில் இரண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சூடான வனஸ்பதி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்றாகக் காய்ந்ததும், மிதமான தீயில் பக்கோடாக்களாக பொரித்தெடுக்கவும்... சுவையான மஷ்ரூம் வெங்காய பக்கோடா தயார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News