25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேன்கனிக்கோட்டை லட்சுமி நரசிம்மர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேன்கனிக்கோட்டை லட்சுமி நரசிம்மர்.

கிருஷ்ணகிரி மாவட் டத்தில் ஒசூரில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவிலும், கர்நாடக மாநிலத் தலைநகரான பெங்களூருவில் இருந்து 65 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. தேன்கனிக்கோட்டை.இங்கு கவி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது. இது ஒரு நாக தோஷ பரிகார தலமாகும். "கவி" என்றால் கன்னட மொழியில் 'குகை' என்று பொருள். இது ஒரு குகைக் கோவில் என்பதால், மேல் கூரை மிகவும் தாழ்வாக இருக்கும். எனவே பக்தர்கள் இறைவன் முன் உட்கார்ந்தபடிதான் பிரார்த்தனை செய்ய முடியும். இந்தக் கோவில் ஐந்து அடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. காடுகளுக்கு இடையில் அமைந்துள்ள இக்கோவில், 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

சில படையெடுப்பின் காரணமாக, இந்த ஆலயமும், அதைச் சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகளும் சிதிலமடைந்தன. இதனால் கோவிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டன. பல ஆண்டுகள் கழிந்த பிறகு, ஒரு நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று இந்தக் கோவில் மீண்டும் திறக்கப்பட்டது. பக்தர்களின் உதவியுடன் கடந்த 10 ஆண்டுகளில் இக் கோவில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த காலங்களில் சாலை வசதி இல்லாததாலும், விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாகவும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்திருந்தது. ஆனால் தற்போது சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. தினசரி பூஜைகள் நடைபெறுகின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News