10-வது முறையாக ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற இந்தியா.
17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி 10-வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
2027-ம் ஆண்டு மே 12 முதல் 29-ம் தேதி வரை உஸ்பெகிஸ்தானில் நடைபெற உள்ள இத்தொடரில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான தகுதிச்சுற்றில் 35 அணிகள் 7 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு விளையாடின.
இந்தியா இடம்பெற்ற 'E' பிரிவு போட்டிகள் மலேசியாவில் நடைபெற்றன. இதில் சிங்கப்பூர், குவாம், பாலஸ்தீனம் ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி, கடைசிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொண்டது.
தகுதிச்சுற்றின் முடிவில் 4 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு டிரா என 10 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி, பிரிவில் முதலிடம் பிடித்து ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.
இதற்கு முன்பு 2002 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
0
Leave a Reply