25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒரே மாதத்தில் வருவாய் ஈட்ட தண்டுக்கீரை, முளைக்கீரையை  சாகுபடி செய்யலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒரே மாதத்தில் வருவாய் ஈட்ட தண்டுக்கீரை, முளைக்கீரையை  சாகுபடி செய்யலாம்.

கோ 1 முதல் 5 வரை என ரகங்களுக்கு நல்ல மண்ணும், மணலும் கலந்த அமிலத்தன்மை கொண்ட நில ம் உகந்தது. களிமண், முற்றிலும் கொண்ட நிலத்தை தவிர்க்க வேண்டும். உப்பு நீர் விதை முளைப்பு திறனை பாதிப்பதால் முளைக்கும் வரை நல்ல நீரும் பின் செடி வளர்ந்த பின் ஓரளவு உப்பு நீரும் உபயோகி க்கலாம் கீரைகள் அதிக சூரிய ஒளியில் அதிக  விளைச்சல் தரும். 25-30 டிகிரி செல்சியஸ்  என்ற வெப்பநிலையில்நன்குவளரும்.இதில் தானியக்கீரை ரகம் வெப்ப மண்டலத்திலும், குளிர் மண்டலத்திலும் பயிரிட ஏற்றது. ஆண்டு முழுவதும் கீரை பயிர் செய்யலாம்.

நிலத்தை 3 முறை எக்டேருக்கு 25 டன்கள் மக்கிய தொழு எருவை கடைசி உழவின் போது இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். பின் 2-க்கு 1.5 மீட்டர் என்ற அளவில் சம பாத்திகள்  மற்றும் பக்கத்தில் நீர் பாசனத்திற்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும். எக்டேருக்கு  அடி உரமாக 75 கிலோ தழைச்சத்து, 50 - கிலோ மணிச்சத்து, சாம்பல் சத்து 25 கிலோ உரங்களை அளிக்க வேண்டும்.

விதைகள் மிகவும் சிறியவையாக இருப்பதால் சீராக விதைக்க விதையுடன் 2 கிலோ மணல் கலந்து பாத்திகளில் நேரடியாக தூவ வேண்டும்.பின் விதை களின் மேல் மண்அல்லது  மணலை மெல்லியபோர்வை  போல் தூவி மூடிவிட வேண்டும்.விதைத்தவுடன் பாத்திகளில்  நிதானமாக நீர்ப்பாய்ச்ச வேண்டும். பின் னர் விதைத்த 3-ம் நாள் தண்ணீர் விட வேண்டும். அதன் பின்னர்  ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த 6 முதல்8 நாட்களில் விதைகள் முளைத்து விடும். பிறகு 12 முதல் 15 செ.மீ. இடைவெளியில் செடி  களை கலைத்து விடவும்.

விதைத்த 21 நாட்களில் இருந்து அறுவடை  செய்யப்படுவதால் மருந்துகள் தெளிக்கக் கூடாது.முளைக்கீரையை விதைத்த 21 முதல்  25நாட்களில் வேருடன் பறிக்க வேண்டும். சிறிய செடி  களை 10 நாட்கள் இடைவெளியில்மற்றொரு  முறை அறுவடை செய்யலாம். மகசூல் எக்டே ருக்கு 10 டன்கள்.தண்டுக்கீரையை விதைத்த 35முதல் 40 நாட்களில் வேருடன் அல்லது கிளைகளை மட் டும் அறுவடை செய்யலாம்.மகசூல் எக்டேருக்கு  16 டன்கள் வரை கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News