25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


சிகப்பு அவல் கார கொழுக்கட்டை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிகப்பு அவல் கார கொழுக்கட்டை.

தேவையானவை -  

ஒரு கப் சிகப்பு அவல்,உப்பு தேவையான அளவு,எண்ணை தேவையான அளவு,1 பெரிய வெங்காயம்,2 பச்சைமிளகாய்,ஒரு டீஸ்பூன்கடுகு,அரை டீஸ்பூன்சீரகம்,ஒரு டீஸ்பூன்கடலைப்பருப்பு, ஒரு டீஸ்பூன்உளுத்தம்பருப்பு,இஞ்சி சிறிய துண்டு,கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு,அரை மூடிதுருவிய தேங்காய்

செய்முறை

சிகப்பு அவல் கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான உணவு.

சிகப்பு அவலை சுத்தம் செய்து கழுவிய பின் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை ,இஞ்சி, இவற்றை நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், கருவேப்பிலை ,வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ,இவற்றை தாளித்து கொள்ளவும். இதனுடன் துருவிய தேங்காய் சற்று வதக்கி கொள்ளவும்.

அவலை நன்கு வடித்து எடுத்துக் கொள்ளவும் .தாளிப்பை மற்றும் உப்பு சேர்த்து, வடித்த அவலுடன் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

தாளித்துச் சேர்த்த அவலை கொழுக்கட்டையாக பிடித்து ,இட்லி பானையில் வைத்து10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.10 நிமிடத்திற்கு பிறகு சிவப்பு அவல் கார கொழுக்கட்டை எடுத்துப் பரிமாறவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News