25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை தொடங்க உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூமை தொடங்க உள்ளது.

மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில்எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் கார் ஷோரூம் ஸ்டோர் திறக்கப்படவுள்ளது. டெஸ்லா இந்தியாவின் சந்தையில் அதிகாரப்பூர்வமாக நுழைவது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

டெஸ்லா இந்திய சந்தைக்கு புதுப்பிக்கப்பட்ட மாடல்Y காரை வழங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம்பல் நிறத்தில், கருப்பு அலாய் வீல்களுடன், நேர்த்தியான, கூபே போன்ற வடிவமைப்பில் இருக்கும் இந்த மாடல் லாங் ரேஞ்ச் RWD (Long Range RWD) மற்றும் லாங் ரேஞ்ச் AWD (Long Range AWD) ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும்.

 மாடல் Y ஆனது இரட்டை வண்ண கருப்பு மற்றும் வெள்ளை கேபினுடன் குறைந்தபட்ச வடிவமைப்பை கொண்டுள்ளது. இதில் 15.4 அங்குல மைய தொடுதிரை, வயர்லெஸ் சார்ஜிங்,USBC போர்ட்கள், குரல் கட்டளைகள், இணைய இணைப்பு மற்றும் செயலி அடிப்படையிலான வாகன அணுகல் போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. டெஸ்லா மாடல்Y இன் விலை ரூ.60 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News