25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விரும்பும் தகுதியான நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது பெற விரும்பும் தகுதியான நபர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள் / அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000- வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

கீழ்கண்ட தலைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை சிறப்பாக விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்திய நிறுவனங்கள்/ கல்வி நிறுவனங்கள் / குடியிருப்போர் நல சங்கங்கள் / தனிநபர்கள் / உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகளுக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கப்படும்.

1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி
2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
3. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4. பசுமை தயாரிப்புகள் /பசுமை தொழில்நுட்பம் தொடர்பான விஞ்ஞான ஆய்வுகள்
5. நிலைத்தகு வளர்ச்சி
6. திடக்கழிவு மேலாண்மை
7. நீர் மேலாண்மை மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு
8. காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை
9. காற்று மாசு குறைத்தல்
10. பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை
11. சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு
12. கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாவட்ட ஆட்சியரின் தலைமையில் அமைக்கப்பட்ட பசுமை சாம்பியன் விருது தேர்வு செய்யும் குழு மூலம் தகுதி வாய்ந்த 100 தனி நபர்கள்/ நிறுவனங்களை ஒவ்வொரு வருடமும் தேர்வு செய்யும். இதற்கான விண்ணப்ப படிவம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் கடைசி நாள் ஆகும்.மேலும், கூடுதல் தகவல்களை பெற மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News