குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராத) 1 பணியிடமும், சிறப்பு சிறார் காவல் பிரிவில் சமூகப்பணியாளர்கள் 2 பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கான வயது வரம்பு 42 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.
விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாராத) பணிக்கு ஒரு மாத தொகுப்பூதியம் ரூ.27804- வழங்கப்படும். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி / சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் /உளவியல் / மனநல மருத்துவம்/ சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டப்படிப்பு பெற்று இருக்க வேண்டும் (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி, சமூகவியல் / குழந்தை மேம்பாடு / மனித உரிமைகள் பொது நிர்வாகம் / உளவியல் / மனநல மருத்துவம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பு பெற்று இருக்கவேண்டும் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு / சமூக நலத்துறையில் திட்ட உருவாக்கம் /செயல்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விருதுநகர் சிறப்பு சிறார் காவல் பிரிவின் சமூகப்பணியாளர் பணிக்கு ஒரு மாத தொகுப்பூதியம் ரூ.18536- வழங்கப்படும். இப்பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப் பணி/ சமூகவியல்/ சமூக அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் மற்றும் கணினி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேற்கண்ட பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் உரிய விண்ணப்பங்கள் அதிகாரப்பூர்வ இணைய தளமான www.virudhunagar.nic.in லிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இப்பதவிகளுக்கான தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass port Size) “மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 2/830-5, வ.உ.சி.நகர், சூலக்கரைமேடு, விருதுநகர்- 626003. தொலைபேசி எண். 04562-293946” என்ற முகவரிக்கு 27.01.2025 மாலை 5.30 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பின்வரும் விண்ணப்பங்கள் தகவலின்றி நிராகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply