25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மது அருந்துவதால் மறதி நோய், அதிகமாவது தெரியவந்துள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மது அருந்துவதால் மறதி நோய், அதிகமாவது தெரியவந்துள்ளது.

மது அருந்துவதால் பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமீபத் திய ஆய்வுகளில் இது வரை வெளிவராத பல தகவல்கள் வெளிவந்துள்ளன.வயதாவதால் ஏற்படுகின்ற ஞாபகம் மறதி நோய், அல்சைமர்ஸ். மது அருந்துவதால் இந்த நோயின் பாதிப்பு அதிகமாவது தெரியவந்துள்ளது.

இந்த நோயின் பல் வேறு நிலைகளில் இருந்த 75 நோயாளிகளை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள் விஞ்ஞானிகள். அவர்களது மூளையில் ஏற்பட்டுள்ள செல் இறப்பு, செல்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத்தில் இருக்கின்ற குழப்பம், ரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆகியவற்றை மது அருந்துவதால் ஏற்படுகின்ற பாதிப்புகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார்கள்.

இரண்டு பாதிப்புகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருப்பது தெரிய வந்துள்ளது. குளிர் பிரதேசங்களில் குறைந்த அளவு மது அருந்துவது என்பது அத்தியாவசியத் தேவையாக உள்ளது.ஆனால் இந்த அளவு அதிகரிக்கும் போது அது பல்வேறு பிரச்னைகளை உருவாக்கும். அதிக மது அல்சைமர் நோயைத் தீவிரப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News