சிவகாசி, இராஜபாளையம், வத்திராயிருப்பு, விருதுநகர், காரியாபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், சிவகாசி, இராஜபாளையம், வத்திராயிருப்பு, விருதுநகர், காரியாபட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள் (29.01.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், ஆனைக்குட்டம் ஊராட்சி, மீனாட்சிபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியினை பார்வையிட்டு, பள்ளியில் அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், பள்ளி குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வரும் முறைகள், குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்து ஆசிரியர் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.ஆனைக்குட்டம் ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், ரூ.1,80,000ஃ- மதிப்பில் அங்கன்வாடி மையம் சீரமைக்கப்பட்டு வரும் பணியினையும்,
மேலும், ஆனைக்குட்டம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் குறித்தும், பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும்,ஆனைக்குட்டம் ஊராட்சியில், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி கட்டி முடிக்கப்பட்டுள்ள பணியினையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முகவூர் நாடார் தெருவில் அமைந்துள்ள அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்தும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், முகவூர் ஊராட்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முகவூர் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதி - 2020-2021 -ன் கீழ், பூக்குழி மைதானத்தில் ஆண்கள் சுகாதார வளாகம் பராமரிப்பு பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், முகவூர் ஊராட்சி தெற்குத்தெரு இந்து நாடார் ஆரம்பப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.முகவூர் ஊராட்சி பாரதி நகரில் கட்டப்பட்டுள்ள பழைய சமுதாயக்கூடத்தினையும் மற்றும் முகவூர் ஊராட்சியில், தூய்மைப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று திடக்கழிவுகளை மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரித்து குப்பைகளை சேகரித்து வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம், தம்பிபட்டி ஊராட்சியில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகங்களை நேரில் சென்று ஆய்வு செய்து, கட்டிடத்தின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.மேலும், தம்பிபட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, அங்கு பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள், வயதுகேற்ற எடை, உயரம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.பின்னர், தம்பிபட்டி ஊராட்சியில், ஊர்ப்புற நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், தம்பிப்பட்டி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக் கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பொருட்களின் இருப்பு, தரம், பயன்பெறும் குடும்ப அட்டைத்தாரர்கள், தராசு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.
தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியினை நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு அடிப்படை வசதிகள் குறித்தும் மற்றும் தம்பிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இ-சேவை மையக் கட்டிடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.பின்னர், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்கப்படும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உணவின் தரம், பயன்பெறும் மாணவர்கள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவருந்தினார்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், வடமலைக்குறிச்சியில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், வடமலைக்குறிச்சியில் உள்ள மாவட்ட கிளை நூலகத்தினை பார்வையிட்டு, நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்களின் விபரம், நூல்களின் இருப்பு, அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.பின்னர், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், கடம்பன்குளம் ஊராட்சியில், மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்;டிக்கடையை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.மேலும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், மாங்குளம் கிராமத்தில் எஸ்.எஸ்.ஆர்.புளு மெட்டலில் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும், குவாரியின் உரிமம், குவாரி இயங்கி வரும் முறை, தயாரிக்கப்படும் பொருட்கள் உள்ளிட்டவை குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்;.
மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென தொடர்புடைய அரசு அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply