நெற்பயிரை தாக்கும் நெல் குலை நோய்களை கட் டுப்படுத்த…..
நெல் குலை நோய் என்பது நெற்ப யிரை தாக்கும் ஒரு நோயாகும். நெற்ப யிரை பல்வேறு பூச்சி கள் தாக்குவதால் இந்த நோய் ஏற்படு கிறதுநெற்பயிரில் தண்டு,கணுப்பகுதி, கழுத்துப்பகுதி, கதிர் ஆகிய அனைத்திலும் பூசன தாக்குதல் காணப்படும். இலைகளின் மேல் பகுதி வெண்மை நிறத்தில் இருந்து சாம்பல் நிற மைய பகுதியுடன் காய்ந்த ஓரங்கள் கொண்ட கண் வடிவ புள்ளிகள் காணப்படும். பல புள்ளிகள் ஒன்று சேர்ந்து பெரிய ஒழுங்கற்ற திட்டுக்கள் உருவாகும். தீவிர தாக்குதலின் போது, பயிர் முழுவதும் * எரிந்தது போன்ற தோற்றமளிக்கும். கதிர் வெளிவந்தவுடன் பயிர்கள் சாய்ந்து விடும். இதையே 'குலை நோய்' என்கிறோம்.
கழுத்து பகுதியில் சாம்பல் நிறம் முதல் பழுப்பு நிற புள்ளிகள் தோன்றி, கருப்பு நிறமாக மாறி, கதிர் மணிகள் சுருங்கி, கதிர்கள் உடைந்து தொங்கி கொண்டிருக்கும். இவை 'கழுத்து குலை நோய் ஆகும். கணுக்கள் கருப்புநிறமாக மாறி உடைந்துவிடும். இதை 'கணு குலை நோய் என்கின்றனர். பயிரின் அடிப்பாகத்தில் இடைக்கணு தாக்குதலும் ஏற்படுவதால், வெண் கதிர் அறிகுறி தோன்றும் கதிர்ப்பருவ நிலைக்கு முன்பே கழுத்துப்பகுதியில் நோய் தாக்கினால் தானியங்கள் உருவாகாது. ஆனால் கதிர்ப்பருவத்திற்கு பின் தாக்குதல் ஏற்பட்டால், தானியம் உருவானாலும், குறைந்த தரத்துடன் காணப்படும். கதிர் மற்றும் கதிர்க்கிளை களில் உள்ள புள்ளி கள் பழுப்பு நிறமாக அல்லது அடர் பழுப்பு நிறமாக இருக்கும். நெல் ரகங்களை பொருத்து, புள்ளிக ளின் அளவும், வடிவ மும் வேறுபடும்.
இலை குலை நோய், கணுகுலை நோய், அதிர் குலை நோய்களை ஏற்படுத்தும் பூசண வித் துக்கள் ஆண்டு முழுவதும் காற்றில் இருக்கும். வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் போதும், காற்றின் ஈரப்பதம் 90 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக இருக்கும் போதும், அதிக அளவில் அம்மோனியம் சல்பேட், யூரியா போன்ற தழைச்சத்து உரங்கள் பயன்படுத்தப்படும் போது குலை நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்.
நோயற்ற பயிரில் இருந்து விதைகளை தேர்வு செய்ய வேண்டும். வயல் மற்றும் வரப்புகளில் உள்ள களைகளை அகற்ற வேண்டும். நோய்க்கு எதிர்ப்புத்திறன் கொண்ட ரகங்களை பயிர் செய்யலாம். பரிந்துரைப்படி விதை நேர்த்தி செய்ய வேண்டும். நோய் தாக்குதல் காணப் பட்டால்தழை ச்சத்து உரம் தாமதமாக இடலாம். சூடோமோனஸ் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் தெளித்து குலை நோய் தாக்குதலை குறைக்கலாம்.
0
Leave a Reply