எலுமிச்சை புல் சாகுபடி
எலுமிச்சை புல் மருத்துவ ரீதியாக பயன்படுவதால் நல்ல விலை கிடைக்கிறது. எனவே இதனை சாகுபடி செய்து லாபம் பெறலாம்.
ஓ.டி.-19, ஓ.டி.-408,ஆர்.ஆர்.எல் -39, பிரகதி, பிரமன், சி.கே.பி. - 25, கிருஷ்ணா மற்றும் காவிரி ஆகியவை பிரபலமான ரகங்களாக பயிரிடப்படு கின்றன.மண்ணின் கார அமிலத்தன்மை 6.0 என்ற அளவில் இருப்பதுடன்.மணல் கலந்த களிமண் நிலம் நிலம் ஏற் றது. அதிக மழைப்பொழிவு, ஈரப்பதத் துடன் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல சூழ்நிலை களில் நன்றாக வளரும்.
இதை சந்துகள் மூலம் பரப்பலாம். ஒரு இடத்தில் 60 x 30 செ.மீ இடை வெளியில் சுமார் 55,600 சந்துகளை நடலாம். மேலும், 60 X 45 செ.மீ இடைவெளியில் ஒரு எக்டேருக்கு 37,000 சந்துகளை நடலாம். எக்டே ருக்கு 4 கிலோ என்ற அளவில் விதைகள் மூலம் பரப்பலாம், அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நாற்றுகளை வளர்த்து நடவு செய்ய வேண்டும். '
எக்டேருக்கு தொழு உரம் 20 -25 டன் என்ற அளவுக்கு அடி உரமாக இடவும். எக்டேருக்கு 50 கிலோ தழைச்சத்து பாதி நட வின் போதும், நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு மீதியையும் இடவும். 7- 15 நாட்கள் இடைவெளியில் கூடுதல் நீர்ப்பாசனம் செய்ய வேண்டும். தேவைப்படும் போது களை எடுக்க வேண்டும்.
பொதுவாக, பூச்சிகள் மற்றும் நோய்கள் தாவரத்தை பாதிக்காது. ஏதேனும் உறிஞ்சும் பூச்சி இருந்தால் மீத்தில் டெமட்டான் 25 இ.சி. அல்லது டைமெத்தோயேட் 30 இ.சி. தெளிக்கவும். கம்பளிப்பூச்சி தாக்கினால் போசலோன் 35 இ.சி. தெளிக்கவும்.
நடவு செய்த 90 நாட்களில் இலைகளை முதலில் அறுவடை செய்யவும், பின்னர் 75 - 90 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யவும். தரை மட்டத்தில் இருந்து 10 -15 செ.மீ உயரம்விட்டு புதரை வெட்ட வேண் டும். எக்டேருக்கு 20 - 30 டன் கிடைக்கும். மருத்துவ பயன்பாட்டுக்காக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்கிறார்கள். நல்ல வருவாய் கிடைக்கும்.
0
Leave a Reply