25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புரட்டாசி பட்டத்தில் வரகு சாகுபடி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புரட்டாசி பட்டத்தில் வரகு சாகுபடி .

சிறுதானியங்களில் சிறந்த வரகு பயிரானது மண்ணிற்கும், மனிதனுக்கும் நன்மை தரும் பயிர்.வரகு பயிரானது வறட்சியை யும், வெப்பத்தையும் தாங்கி வளரக்கூடியது.  தமிழகத்தில் பிரதான சிறுதானியமாக  பயிரிடப்படுகிறது. அதிக காற்று, வறட்சி, கனமழை போன்ற கடினமான சூழ்நி லையிலும் வளரும் வரகு பயிரில் அதிக இரும்புச்சத்து,நார்ச்சத்து உள்ளது. மேலும் பறவைகள், விலங்குகளால் இப்பயிரை சேதப்படுத்தும் வாய்ப்பு குறைவு.

மானாவாரியில் ஆடிப்பட் டம் (ஜூன், ஜூலை), புரட் டாசி பட்டமும் (செப்., அக்.,) இறவைக்கு அனைத்து பருவங் களும் ஏற்றது. மானாவாரிக்கு 350 முதல் 500 மி.மீ., வரை நீர் தேவைப்படும். கோடை உழவு செய்த நிலத்தில் ஒரு முறை டிராக் டரால் உழவேண்டும். ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் அல்லது ஒரு டன் மண்புழு உரம் இட்டு கொக்கி கலப்பையால் இருமுறை உழவேண்டும். இதனுடன் (4 800 கிராம் பாக்கெட்) அசோஸ் பைரில்லம் உயிர் உரத்தையும் பயன்படுத்தலாம்.

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன், ஒரு ஏக்க ருக்கு தேவையான 5 கிலோ விதைகளுடன் சூடோமோனஸ், 200 கிராம் 50 கிராம் அசோஸ்பைரில்லம் சேர்த்துகலந்து வைக்க வேண்டும். அந்த விதைகளுடன் இர இரண்டு பங்கு (10 கிலோ) மணலுடன் கலந்து விதைத்தால் விதைப்பு பரவலாக இருக்கும்.பயிர்களின் வளர்ச்சி சீராக இருக்கும். விதைத்த 15வது நாள் மற்றும் 45வது நாளில் கையால் களை எடுக்க வேண் டும். விதைத்த 20வது நாளில் பயிர்களின் எண்ணிக்கை ஒரே 5 இடத்தில் அதிகமாக இருந்தால் -பயிர் களைப்பு செய்யலாம்.

மண் பரிசோதனை அடிப் படையில் ஏக்கருக்கு 55 கிலோ - சூப்பர் பாஸ்பேட்டை அடியுர - மாக இட வேண்டும். மேலும் அடியுரமாக ஏக்கருக்கு 19 கிலோ யூரியாவை இடவேண் டும். விதைத்த 45வது நாள் மேலுரமாக 19 கிலோ யூரியா இட வேண்டும். நுண்ணுா ட்டச்சத்து குறைபாட்டை போக்க ஏக்கருக்கு 5 கிலோ அளவு வேளாண் பல்கலையில் சிறுதானிய நுண்ணுணூட்டக் கல வையை 20 கிலோ மணலுடன் கலந்து நிலத்தின் மேல் சீராக துாவ வேண்டும்.

வரகு பயிர்களில் பூச்சி, நோய் தாக்குதல் குறைவு.குருத்து ஈதாக்குதல் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 100 மில்லி மீதைல் டெமட்டான் இ.சி., யை 200 லிட்டர் தண் ணீருடன் கலந்து விதைத்த முதல் 25ம் நாட்களில் தெளிக் கலாம். இலையுறை அழுகல் நோய் ஏற்பட்டால் பூப்பூக்கும் 45 வதுநாளில் ஏக்கருக்கு 400 கிராம்மான்கோசெட்மருந்தை 200 லிட்டர்தண்ணருடன்கலந்து தெளிக்கலாம்.110 நாட்களில் அறு டைக்கு தயாராகி விடும் பயிர்களில் மூன்றில் இரண்டு பங்கு முதிர்ச்சியடைந்தது அறுவடை செய்யலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News