புரதச்சத்து அதிகம் நிறைந்த சோளம்
புரதச்சத்து அதிகம் நிறைந்த ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று சோளம், சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். இதற்கு சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்ற வேறு பெயர்களும் உண்டு.
வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும்.
அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.
சோளத்தில் வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம் என பல வகைகள் இருக்கின்றன.
அரிசியுடன் ஒப்பிடும்போது இதில் நார்ச்சத்து அதிகம், இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது, எனவே வயிறு மற்றும் குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
கோதுமை போன்ற தானியங்களை ஒப்பிடுகையில் சோளத்தில் குளுட்டன் இல்லை, குளுட்டன் அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆனால் சோளத்தில் குளுட்டன் கிடையாது, எனவே இதை தாராளமாக சாப்பிடலாம்.
உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள், சோளத்தை உட்கொள்ள வேண்டும். இதில், போதிய அளவில் கார்போஹைட்ரேட்களும் உள்ளன, இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.
சோளத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது, இது உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தாராளமாக உட்கொள்ளலாம்.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து விடுகிறது, எனவே இதயம் தொடர்பான நோய்கள் உங்களை நெருங்காது, இதுதவிர ஆன்டி ஆக்சிடன்டுகள், மெக்னீசியம், விட்டமின் பி மற்றும் இ இருப்பதால் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.
சோளத்தில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
0
Leave a Reply