25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வரிக்குதிரைகளுக்கு  உதவும்  ஒட்டைச்சிவிங்கிகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வரிக்குதிரைகளுக்கு உதவும்  ஒட்டைச்சிவிங்கிகள் .

இயற்கையில் ஒவ்வோர் உயிரும் மற்றோர் உயிரைச் சார்ந்து தான் வாழ்கிறது. இதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். விலங்குகள், தாவரங்கள் ஏதேனும் ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்கின்றன. இதேபோல இரண்டு வெவ்வேறு விலங்குகள் ஏதோ ஒரு வகையில் தங்களுக்குள் உதவிக் கொள்ளும்.

சமீபத்தில் வரிக்குதிரைகள் ஒட்டைச்சிவிங்கி களுக்கு இடையே இப்படியான நட்பு இருப்பது முதன்முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் உள்ள புல்வெளிகளில் வாழும் வரிக்குதிரைகள் இடையே ஓர் ஆய்வை உயிரியலாளர்கள் மேற் கொண்டார்கள். ஆறு வரிக்குதிரைகளின் கழுத்துகளில் வீடியோ கேமரா வைக்கட்டி வைத்தார்கள். இதன்மூலம் அவை எங்கெல்லாம் செல்கின்றன, எந்த விலங்குகளுடன் எல்லாம் ஒருங்கிணைந்து வாழ்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள்.

காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகளுடன் இணைந்து வரிக்குதிரைகள் புல் மேய்வது, தண்ணீர் குடிப்பதுமாக இருந்தது தெரிய வந்தது.ஆனால் இவற்றை விட அதிகமான நேரத்தை ஓட் டகச் சிவிங்கிகளுடன் தான் வரிக்குதிரைகள் செலவிட்டுள்ளன.ஏன் இந்த இரண்டு விலங்குகளுக்கு இடையே மட்டும் இப்படியான நெருக்கம் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதுதான் இந்த விஷயம் தெரிய வந்தது. அதாவது ஒட்ட கச்சிவிங்கிகள் உயரமாக இருப்பதால் துாரத்தில் வரும் ஆபத்தை முதலி லேயே கண்டு உணர்ந்து எச்சரித்து விடுகின்றன.

அதேபோல் வரிக் குதிரைகள் பொதுவாகக் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிவதால், எதிரி விலங்குகள் அவ்வளவு சுலபமாகத் தாக்க முற்படுவதில்லை.இதனால் இவற்றுடன் சேர்ந்திருக்கும் ஒட்டகச் சிவிங்கிகளும் பாதுகாப்பு பெறுகின்றன. இந்த வகையில் இரண்டு விலங்குகளும் ஒன்றுக்கொன்று உதவி வாழ்கின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News