25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பீர்க்கங்காய்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பீர்க்கங்காய்

பீர்க்கங்காவில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்று  நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.இதன் இலை, விதைகள் மற்றும் வேர் என, அனைத்தும்மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வர, நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.

மஞ்சள் காமாலை நோய்க்கு, பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில், இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள‎ இடங்களில் பீர்க்கங்காய் இலை சாற்றை பூச,நிவாரணம் கிடைக்கும்.

பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது. தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாக பயன்படுகிறது.கண் பார்வை நன்றாக தெரியவும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும், பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தோல் நோயாளிகள் தவறாமல் இதை சேர்த்துக் கொண்டால், விரைவில் குணமடையலாம்.வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதை தடுத்து, வயிற்றில், புண்கள் வராமல் காக்கும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News