25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அவல் கட்லெட்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அவல் கட்லெட்

தேவையான பொருட்கள்-

அவல் 1 கப்,உருளை கிழங்கு 2,சீஸ் 1 கட்டி துருவியது,

கேரட் 1/4 கப்,பச்சை மிளகாய் 1/2 (பாதி),எலுமிச்சை ஜூஸ் 1/2 பாதி பழம்,

 3 பிரட் தூள்,இஞ்சி 1 துண்டு,மைதா 2டீஸ்பூன், தண்ணீர்,உப்பு ,

மிளகு தூள் 1/4 டீஸ்பூன் ,கரம் மசாலா 1/4 டீஸ்பூன்,சாட் மசாலா தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்,

ஆயில் 1 குழிகரண்டி,கொத்தமல்லி தழை

செய்முறை -

பிரட் துண்டுகள்3 மிக்ஸியில் பொடித்து வைக்கவும்.அவல் சுத்தம் செய்து கழுவி2,0 நிமிடம் தண்ணீரில் ஊற விடவும்.உருளை கிழங்கு வேக விட்டு மசித்து வைக்கவும்.சீஸ் துருவி வைக்கவும்.கேரட் துருவி வைக்கவும்.கழுவி ஊற விட்ட அவலை பிழிந்து வைக்கவும்.இஞ்சி பொடியாக நறுக்கி வைக்கவும்.பச்சை மிளகாய்1 பொடியாக நறுக்கி வைக்கவும்.கொத்தமல்லி தழை சிறிது பொடியாக நறுக்கி வைக்கவும்.எலுமிச்சம் பழம் பாதி எடுத்து வைக்கவும்.

கரம் மசாலா1/4 டீஸ்பூன்,மிளகு தூள்1/4 டீஸ்பூன்,சாட் மசாலா1/2 டீஸ்பூன்,உப்பு,மிளகாய் தூள்1/4 டீஸ்பூன் எடுத்து வைக்கவும்.உருளை கிழங்கு மசித்தது சீஸ் ,அவல் ,கேரட் ,பச்சை மிளகாய் ,இஞ்சி ,கொத்தமல்லி நறுக்கியது அனைத்து மசாலா தூள் உப்பு சேர்த்து பிசைந்து வைக்கவும்.எலுமிச்சை ஜூஸ் கடைசியாக சேர்க்கவும். நன்கு பிசைந்து வைக்கவும்.சிறிய உருண்டை செய்து நடுவில் தட்டை ஆக்கவும்.

மைதா மாவு2 டீஸ்பூன் சலித்து தண்ணீர் சிறிது ஊற்றி கட்டி பிடிக்காமல் கலக்கி வைக்கவும்.பிரட் தூள் ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.தட்டையாக உருட்டிய மாவு எடுத்து மைதா கரைசலில் நனைத்து பிரட் தூளில் பிரட்டி தோசை கல்லில் அடுப்பை சிம்மில் வைத்து இரு புறமும் பொன்னிறமாகும் வரை ஆயில் சேர்த்து சுட்டு எடுக்கவும். கிறிஸ்பியான கட்லெட் ரெடி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News