25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அன்னு ராணி, முரளி ஸ்ரீசங்கர் உலக கான்டினென்டல் தடகளத்தில்    முதலிடம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அன்னு ராணி, முரளி ஸ்ரீசங்கர் உலக கான்டினென்டல் தடகளத்தில் முதலிடம்

 நேற்று உலக தடகள கான்டினென்டல் டூர் போட்டிஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ,உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான (செப் 13-21, டோக் கியோ) தகுதிச் சுற்றாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்தியாவின் அன்னு ராணி, பெண்களுக்கான ஈட்டி எறிதலில் , 4வது வாய்ப்பில் அதிகபட்சமாக 62.01 மீ., எறிந்து முதலிடம் பிடித்தார். அடுத்த இரு இடங்களை இலங்கையின் தில்ஹானி (56.27 மீ.,), இந்தியாவின் தீபிகா (54.20 மீ.,) கைப்பற்றினர். 

இந்தியாவின் ஷிவம் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் ,(80.73 மீ.,) 2வது இடம் பிடித்தார். இந்தியாவின் ரோகித் யாதவ் (80.35 மீ.,), சச்சின் யாதவ் (79.80 மீ.,),யாஷ்விர் சிங் (78.53 மீ.,) முறையே 4, 5, 6வது இடம் பிடித்தனர்.

 இந்தியாவின் விஷால் ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் பைனலில், (45.72 வினாடி), அமோஜ் ஜேக்கப் (45.86), சந்தோஷ் குமார் (46.89 வினாடி, தமிழகம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.

இந்தியாவின் அபினயா பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் (11.57 வினாடி), ஸ்னேகா (11.70), நித்யா காதே (11.70) முதல் மூன்று இடம் பிடித்தனர்.

மலேசியாவின் ஆண்களுக்கான 100 மீ., ஓட்டத்தின் பைனலில் முகமது அசீம் (10.35 வினாடி) முதலிடம் பெற்றார். இந்தியாவின் லாலு பிரசாத் போய் (10.54 வினாடி), ராகுல் குமார் (10.59, தமிழகம்) முறையே 4, 6வது இடம் பிடித்தனர்.  

தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் நந்தினி பெண்களுக்கான 100மீ., (13.80 வினாடி) 2வது இடம் பிடித்தார். ஒடிசா வீராங்கனை பிரக்யான் பிரசாந்தி சாஹ் (13.74) முதலிடத்தை கைப்பற்றினார்.

இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர் ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் அதிகபட் சமாக 8.13 மீ., தாண்டி முதலிடத்தை கைப்பற்றினார். அடுத்து இரு இடங்களை ஷாந்வாஸ் கான் (8.04 மீ.,), லோகேஷ் சத்யநாதன் (7.85 மீ.,) பிடித்தனர்.

இந்தியாவின் அனிமேஷ் ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் இலக்கை 20.77 வினாடியில் கடந்து முதலிடம் பிடித்தார். தமிழகத்தின் ராகுல் குமார் (21.17) 3வது இடத்தை கைப்பற்றினார். . 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News