25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

புற்றுநோய் இருப்பதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

செயற்கை நுண்ணறிவு உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து வரும் நிலையில், பெண் ஒருவர் தனக்கு புற்றுநோய் இருப்பதை ஏஐ உதவியுடன் தெரிந்து கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவம், கல்வி, பொருளாதாரம் என பல துறைகளிலும் ,ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமல்லாது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முன்பெல்லாம் ஏதாவது தகவல் தேட வேண்டியிருந்தால் கூகிளுக்கு செல்வதை தாண்டி, எல்லாமும் ஏஐயிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளும் நிலை வந்துவிட்டது.

சமீபத்தில் ஒரு பெண் சாட் ஜிபிடியிடம் பேசி தனக்கு கேன்சர் இருப்பதை கண்டறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ப்ரான்ஸை சேர்ந்த மார்லி என்ற பெண் சமீபமாக இரவில் அதிகமாக வியர்ப்பது, சருமத்தில் எரிச்சல் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோதும் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன் பின்னர் அவர் இதுகுறித்து சாட்ஜிபிடியிடம் பேசியுள்ளார். அது வழங்கிய அறிவுறுத்தலின் பேரில் மீண்டும் மருத்துவரை அணுகியபோது அவருக்குHodgkinLymphoma என்ற அரியவகை புற்றுநோய் ஆரம்ப நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவருக்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைகள் அளிப்பதன் மூலம் குணப்படுத்தி விடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News