ரூ.30 கோடியில் 10 மாடி இசையமைப்பாளர்கள் சங்கக் கட்டடம்!.
சென்னை வடபழனியில் உள்ள சினிமா இசையமைப்பாளர்கள் சங்கத்தின் பழைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. ரூ.30 கோடி செலவில் 10 மாடிகளுடன் பிரம்மாண்டமாக உருவாகும் இக்கட்டடத்திற்கான நிதி திரட்ட சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகிய இடங்களில் இசைக்கச்சேரிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்கள் இக்கச்சேரிகளில் பங்கேற்கச் சம்மதித்துள்ளனர்.
0
Leave a Reply