25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


வெறும் ரூ.140 செலவில் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவி! டெல்லி பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெறும் ரூ.140 செலவில் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவி! டெல்லி பள்ளி மாணவர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு.

காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தக் குறைந்த செலவில் ஒரு புதுமையான தீர்வைக் கண்டுபிடித்துள்ளனர் டெல்லியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள்.டெல்லியில்11ஆம் வகுப்பு படிக்கும் கிரிஷ் அகர்வால் மற்றும் சமர்த் மேத்தல் ஆகிய இரு மாணவர்களும் இணைந்து, வெறும் ரூ.140 செலவில் காற்றைச் சுத்தப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

மின்விசிறியில் பொருத்திப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி, காற்றில் கலந்திருக்கும் நுண்ணிய PM2.5 மாசுத் துகள்களைக் குறைக்க உதவுகிறது.மாணவர்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்தக் கருவியைப் பயன்படுத்திய ஒரு மணி நேரத்தில் PM2.5 மாசு அளவு 158-ல் இருந்து 11 ஆகக் குறைந்துள்ளது.

மாசு அளவில் ஏற்பட்ட மாற்றம்:

கருவியைப் பயன்படுத்துவதற்கு முன்பு: 158

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு:11விலையுயர்ந்த காற்று சுத்திகரிப்புக் கருவிகளுக்கு மாற்றாக, குறைந்த செலவில் ஒரு தீர்வை உருவாக்க முயன்றுள்ள இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பு கவனம் ஈர்த்துள்ளது.

பள்ளிப் பருவத்திலேயே சுற்றுச்சூழல் பிரச்சினைக்குத் தொழில்நுட்பத்தின் மூலம் தீர்வு காண முயலும் இந்த இளம் கண்டுபிடிப்பாளர்களின் முயற்சி பாராட்டுக்குரியது!

குறைந்த செலவு... புதுமையான சிந்தனை... சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இளம் தலைமுறையின் பங்களிப்பு

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News