உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி..
சிறு பிள்ளைகள் இருவர் அண்ணன் தம்பி என்று வைத்துக்கொள்வோம். ஆனால், தற்போது அவர்கள் சண்டை போட்டுக்கொண்டு பேசுவதில்லை. அண்ணன் ஒரு தின்பண்டம் வாங்கி வருகிறான். தன் தம்பியிடம் பாதி கொடுக்கிறான். ஆனால் தம்பி, அண்ணன் மீதுள்ள கோபத்தால் வேண்டாம் என்கிறான். அப்போது அண்ணன்'உனக்குக் கோபமாச்சி, எனக்கு இலாபமாச்சி' என்று சொல்லிக்கொண்டு மீதி பாதி தின்பண்டத்தையும் அவனே தின்றுவிடுவான்.
0
Leave a Reply